ஜீவா நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'யான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாக தவறிய போதிலும், தற்போது அவர் நடித்து வரும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் நயன்தாராவுடன் ஜீவா நடித்து வரும் 'திருநாள்' படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்கனவே ஏற்படுத்திய நிலையில் மற்றொரு பிரபல நடிகையான ஹன்சிகாவுடன் 'போக்கிரி ராஜா' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் 'ஜெமினி கணேசன்' என்ற படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக இன்னுமொரு தென்னிந்திய பிரபல நடிகையான தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'புலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் நடிகர் ஜீவாவுடன் தென்னிந்திய திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா, ஹன்சிகா மற்றும் தமன்னா ஆகிய மூவரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
சினிமா
,
தமன்னா
,
நயன்தாரா
,
மூணு லட்டு திங்க ஆசைபடும் ஜீவா
,
ஜீவா
,
ஹன்சிகா