ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை அதனை இதுவரை நடந்து வந்த அனைத்து அரசியல் தேர்தலில் செவ்வென செய்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.
ஆனால் இன்று அவர் வீட்டில் நடக்கும் விழா போல நடிகர் சங்க தேர்தல் காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி ஆகியும் தேர்தல் நடத்தும் பத்மநாபன் ஐயாவும் அனைத்து வாக்குபெட்டிகளையும் சீல் வைத்துவிட்டு கிளம்பிவிட்டார் அப்பவும் அஜித் வரலை…!
காலையிலிருந்து அந்த மெயின் ரோடில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களும், பொதுமக்களும் கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஏன் அஜித் வரலை? என்று விசாரித்ததில் கிடைத்திருக்கும் தகவல்கள் சரியானதுதானோ என்றுதான் தோன்றுகிறது.
அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட சினிமா விழாவில் மேடையில் “இந்த விழாவுக்கு வரலைன்னா அவ்வளவுதான்னு மிரட்டுறாங்கய்யா….” என்று பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தார். அரங்கமே விசிலில் காது கிழிந்தாலும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பலரது முகம் கடு கடுவென இருந்தது, ஆனால் ரஜினியோ அஜித் சொன்ன அந்த வார்த்தைக்காக முதல் ஆளாக எழுந்து நின்று கைத்தட்டினார். அதன்பின் அஜித்துக்கு பலமுறை மிரட்டல்கள் வந்தது எல்லாமே அனைவரும் அறிந்ததே. இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த அஜித்திற்கு ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை. அப்போது ரஜினிதான் அஜித்தை கலைஞரிடம் அழைத்து சென்று பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வைத்தார்.
இதனால்தான் இன்று அஜித் நடிகர் சங்க தேர்தலை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இளம் நடிகர்கள் கூட அப்போது எனக்காக குரல் கொடுக்க வரவில்லை அவர்களுக்கு ஓட்டு கட்டு என்று வீட்டிலேயே இருந்துவிட்டாராம். காலில் அடிப்பட்ட காரணத்தினால் மருத்துவமனை மற்றும் வீடு என திரிந்து தற்போது அவரின் மகள் பள்ளியில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டாராம்…!
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா