"அஜித்துக்கு ஜால்ரா அடிக்கும் சிம்பு" வாலுவை கழுவி ஊத்திரத பாருங்கள்! வீடியோ
வாலு மூன்று வருட இடைவேளைக்கு பிறகு அஜித், விஜய் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இன்று வெளியானது.
கதை
ஒரு சராசரியான நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சிம்பு. முதல் பார்வையிலேயே ஹன்சிகா மீது காதல் கொண்டு, பல எதிர்பாராத சந்திப்புகளுக்கு பிறகு தான் காதலை ஹன்சிகாவிடம் சொல்கிறார் சிம்பு. ஆனால் ஏற்கனவே தன் முறைமாமனுக்கு நிச்சியக்கப்பட்ட பெண், இன்னும் 2 வருடத்தில் திருமணம் நடக்கப்போவதாகவும் கூறுகிறாள். வேண்டும் என்றால் நண்பர்களாக இருப்போம் என்கிறார்.
சிம்பு அரை மனதோடு சம்மதிக்க அடுத்த இரண்டு வருடத்துக்குள் அவர் மனசை மாற்ற முயற்சி செய்கிறார் சிம்பு. இதற்கிடைய ஹன்சிகாவுக்கு நிச்சியக்கப்பட்ட மாப்பிள்ளை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வட்டிக்கு பணம் கொடுப்பது என மிகப்பெரிய தாதாவாக வலம் வருபவராக இருக்கிறார்.
இதையெல்லாம் மீறி தனது காதலை ஹன்சிகாவிடம் புரிய வைத்து காதலில் ஜெயித்தாரா ? முறை மாமனாக வரும் வில்லனை வீழ்த்தினரா என்பது தான் வாலு படத்தின் கதை.
படத்தை பற்றி அலசல்
கதை என்னவோ பழைய மாவு தான் என்றாலும், சுட்ட விதமும், ஜனரஞ்சஜமான கலவையும் படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது. முதல் பாதி சந்தானத்தின் கலகலப்பும், சிம்பு அதியரடியான வசனமும் ரசிகர்களின் கைதட்டுகளை அள்ளுகிறது.
விடிவி கணேஷுடன் சேர்ந்து கலாட்டா செய்வதிலும் நடிப்பில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சும் அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார்.
ஹன்சிகாவும் சிம்புவுக்கு போட்டி போடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிகர்களை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.
சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். முறைமாமனாக வரும் ஆதித்யா, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பிரம்மானந்தம் ஒரு சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
பலம்
நேர்த்தியான திரைக்கதையும் படத்திற்கு பக்கபலமாக தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், படத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது. ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. சிம்பு எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் கெட்டப்பில் வரும் தாறுமாறு பாடல் ஆட்டம் போட வைப்பது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கிறது
பலவீனம்
பார்த்து சலித்து போன கதை, சில இடங்களில் பல கமர்ஷியல் படங்களின் பழைய காட்சி அமைப்புக்கள்.