‘மாஸ்’ படம் இந்தளவுக்கு அவமானகரமான தோல்வியாக அமையும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சூர்யா. அவரின் ‘அஞ்சான்’ படம் ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு நக்கல், நையாண்டி, கேலி செய்யப்பட்டது என்பது இந்த உலகம் அறியாதது அல்ல. இந்த சூழலில் தான் ‘மாஸ்’ படத்தை பெரிதும் நம்பியிருந்தார் சூர்யா.
ஆனால் அஞ்சானுக்கு நான் கொஞ்சமும் சளைத்தவன் அல்ல என்று நெஞ்சை நிமிர்த்தி சூர்யாவின் கேரியரில் மோசமான தோல்விப்படமாக அமைந்தது மாஸ். இப்படி அடுத்தடுத்து இரண்டு மெகா தோல்விகளை கொடுத்தும் கூட சூர்யா நடித்து வரும் புதுப்படமான ‘24′ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை மிகப்பெரிய விலைக்கு பிஸினஸ் ஆகியிருக்கிறது என்று கோடம்பாக்கமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.
அப்படியானால் சூர்யாவின் மவுசு குறையவில்லையா? என்று கேட்பவர்களுக்குத்தான் இந்த தகவல். அப்படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் ஏற்கனவே தெலுங்கில் ‘மனம்’ உட்பல சில ஹிட் படங்களைக் கொடுத்தவர். அதேபோல அதில் ஹீரோயினாக நடித்து வரும் சமந்தாவும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த இருவரை நம்பித்தான் 20 கோடி ரூபாய்க்கு தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறார் தெலுங்கு நடிகர் நிதின்.
Tags:
Cinema
,
சினிமா