ரஜினி புதிய படத்தில் நடிக்கிறார் என்றாலே அதற்கு ரசிகர்களிடம் தனி எதிர்ப்பார்ப்பு இருக்கும். இப்போது ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
ரஜினியின் ஜோடியாக பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கும் இந்த படத்தில், ரஜினி மகளாக தன்ஷிகா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் புதுப்பட ‘சூட்டிங்’ விரைவில் மலேசியாவில் தொடங்க இருக்கிறது. என்றாலும் படத்தின் பெயர் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இப்போது ரஜினியின் புதுப்படத்துக்கு ‘கண்ணபிரான்’ என்று பெயர் வைக்கப்படும் என்று தெரிகிறது.
’கண்ணபிரான்’ என்ற பட தலைப்பை டைரக்டர் அமீர் சில வருடங்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்திருக்கிறார். ரஜினிக்கு இந்த தலைப்பு மிகவும் பிடித்து விட்டது. எனவே, அமீரை அணுகி அந்த தலைப்பை பெற முயற்சிகள் நடந்து வருகின்றன.
‘லிங்கா’ பட தலைப்பையும், இயக்குனர் அமீர் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த தலைப்பை கொடுக்கும்படி கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட போது, ’நான் ரஜினிசாரின் மிகப்பெரிய ரசிகன் அவருக்கு இந்த பட தலைப்பை கொடுப்பதை பெருமையாக கருதுகிறேன்’ என்று கூறினார். எனவே ‘கண்ணபிரான்’ தலைப்பையும் ரஜினிக்காக, டைரக்டர் அமீர் நிச்சயம் கொடுப்பார் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த படத்துக்கு ‘காளி’ என்று பெயர் வைக்கப்படலாம் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது ‘கண்ணபிரான்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பெயருக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Tags:
Cinema
,
Kannapiran Movie
,
Kannapiran Movie Online HD
,
Rajinikanth New Movie Kannapiran
,
கண்ணபிரான் திரை விமர்சனம்
,
சினிமா