அஜித்-விஜய்யை பெருமைப்படுத்த வரும் படங்கள்..!!

10:33 PM |
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்களில் வசூல் மன்னர்கள் அஜித்-விஜய். இவர்கள் படம் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா தான்.

இந்நிலையில் விஜய்யை மையப்படுத்தி அவரின் தீவிர ரசிகர்கள் குறித்து விரைவில் 3 ரசிகர்கள் என்ற படம் வரவிருக்கின்றது.

இதேபோல் அஜித்தை போலவே இருக்கும் கன்னட நடிகர் ஒருவர் முதன் முறையாக ‘தல போல வருமா’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் இவர்களின் பெருமைகளை பேசும் படமாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

3 ரசிகர்கள் – முன்னோட்டம்..!!

1:41 AM |
அல்-தாரி மூவீஸ் தயாரிக்கும் படம் 3 ரசிகர்கள். இந்த படத்தில் பிரேம்யாஷ், ரோஷன், ஆல்வின் ஜான் ஆண்டனி, பிஜாய்,சந்தீப், மீரா, சுவாதி, பவர்ஸ்டார் சீனிவாசன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், கிரேன் மனோகர், மெப்புசாமி, அர்ஜுன், ரியாஸ்கான், சேரன்ராஜ், மணிமாறன், சிவரஞ்சனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை-ரோணி ராபெல், ஒளிப்பதிவு- பிரசாந்த் கிருஷ்ணா, திரைக்கதை- வி.ஆர். பால கோபால், வசனம்-ஐ.கணேஷ், படத்தொகுப்பு-பாபுரத்தினம், ஸ்டண்ட்- ரன்ரவி, நடனம்-கிரண், கதை-இயக்கம்- ஷெபி. தயாரிப்பு- சி.ஆர். சலீம், ஆண்டோ ஜோசப்.

படம்குறித்து விஜய் ரசிகரான இயக்குனர் ஷெபியிடம் கேட்ட போது…

 குழந்தை பருவத்தில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் ஒரு இளைஞன், பொள்ளாச்சி அருகே உள்ள தனது கிராமத்தில் இருந்து விஜய்யை பார்ப்பதற்கான சென்னை வருகிறான். அங்கு 2 பேர் அவனுக்கு நண்பர்களாகிறார்கள். 3 பேரும் விஜய்யை பார்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீர் என்று எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவம் இவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடுகிறது.
அதிலிருந்து மீண்டார்களா? விஜய்யை 3 பேரும் சந்தித்தார்களா? என்பது தான் கதை.

3 ரசிகர்கள் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, பழனி, கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு நடிகர் விஜய் வீட்டில் நடை பெற்றது. விஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து எழுதப்பட்ட பாடல் ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது.
அனைவரும் ரசிக்கும் விதத்தில் படம் உருவாகி இருக்கிறது என்றார்.

மேலும் வாசிக்க…

ரசிகர்களின் கதைக்காக வீட்டைக்கொடுத்த விஜய்..!!

3:02 AM |
நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 பேரின் கதையை ‘3 ரசிகர்கள்’ என்ற பெயரில் சினிமாவாக இயக்கி வருகிறார் ஷெபி. இவர் ஏற்கெனவே பிளஸ் 2, டூரிஸ்ட் ஹோம் என்கிற குறும்படங்களை இயக்கியவர். தற்போது 3 ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். இது 3 விஜய் ரசிகர்களை பற்றியது.

விஜய்யின் தீவிர ரசிகரான ஹீரோ அவரை நேரில் பார்க்கும் ஆசையில் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். சென்னையில் இருக்கும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து விஜய் வீட்டிற்கு சென்று அவரை பார்க்க திட்டமிடுகிறார். அப்படி பார்க்க செல்கிறபோது மூவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? விஜய்யை சந்தித்தார்களா? என்பது படத்தின் கதை.

இதில் பிரேம் யாஷ், மீரா, என்ற புதுமுகங்களுடன் நிழல்கள்ரவி, சேரன்ராஜ், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விஜய்யின் வீட்டை சுற்றிலும், அவரின் வீட்டிலும் எடுக்கப்பட வேண்டியது இருந்ததாம். இதற்காக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதையை சொல்லி அவர்களின் அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com