நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 பேரின் கதையை ‘3 ரசிகர்கள்’ என்ற பெயரில் சினிமாவாக இயக்கி வருகிறார் ஷெபி. இவர் ஏற்கெனவே பிளஸ் 2, டூரிஸ்ட் ஹோம் என்கிற குறும்படங்களை இயக்கியவர். தற்போது 3 ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். இது 3 விஜய் ரசிகர்களை பற்றியது.
விஜய்யின் தீவிர ரசிகரான ஹீரோ அவரை நேரில் பார்க்கும் ஆசையில் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். சென்னையில் இருக்கும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து விஜய் வீட்டிற்கு சென்று அவரை பார்க்க திட்டமிடுகிறார். அப்படி பார்க்க செல்கிறபோது மூவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? விஜய்யை சந்தித்தார்களா? என்பது படத்தின் கதை.
இதில் பிரேம் யாஷ், மீரா, என்ற புதுமுகங்களுடன் நிழல்கள்ரவி, சேரன்ராஜ், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விஜய்யின் வீட்டை சுற்றிலும், அவரின் வீட்டிலும் எடுக்கப்பட வேண்டியது இருந்ததாம். இதற்காக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதையை சொல்லி அவர்களின் அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
Tags:
3 ரசிகர்கள்
,
Cinema
,
Vijay
,
Vijay fans
,
சினிமா
,
விஜய்