அல்-தாரி மூவீஸ் தயாரிக்கும் படம் 3 ரசிகர்கள். இந்த படத்தில் பிரேம்யாஷ், ரோஷன், ஆல்வின் ஜான் ஆண்டனி, பிஜாய்,சந்தீப், மீரா, சுவாதி, பவர்ஸ்டார் சீனிவாசன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், கிரேன் மனோகர், மெப்புசாமி, அர்ஜுன், ரியாஸ்கான், சேரன்ராஜ், மணிமாறன், சிவரஞ்சனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை-ரோணி ராபெல், ஒளிப்பதிவு- பிரசாந்த் கிருஷ்ணா, திரைக்கதை- வி.ஆர். பால கோபால், வசனம்-ஐ.கணேஷ், படத்தொகுப்பு-பாபுரத்தினம், ஸ்டண்ட்- ரன்ரவி, நடனம்-கிரண், கதை-இயக்கம்- ஷெபி. தயாரிப்பு- சி.ஆர். சலீம், ஆண்டோ ஜோசப்.
படம்குறித்து விஜய் ரசிகரான இயக்குனர் ஷெபியிடம் கேட்ட போது…
குழந்தை பருவத்தில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் ஒரு இளைஞன், பொள்ளாச்சி அருகே உள்ள தனது கிராமத்தில் இருந்து விஜய்யை பார்ப்பதற்கான சென்னை வருகிறான். அங்கு 2 பேர் அவனுக்கு நண்பர்களாகிறார்கள். 3 பேரும் விஜய்யை பார்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீர் என்று எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவம் இவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடுகிறது.
அதிலிருந்து மீண்டார்களா? விஜய்யை 3 பேரும் சந்தித்தார்களா? என்பது தான் கதை.
3 ரசிகர்கள் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, பழனி, கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு நடிகர் விஜய் வீட்டில் நடை பெற்றது. விஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து எழுதப்பட்ட பாடல் ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது.
அனைவரும் ரசிக்கும் விதத்தில் படம் உருவாகி இருக்கிறது என்றார்.
Tags:
3 ரசிகர்கள்
,
Cinema
,
vijay Fan
,
சினிமா
,
தலைவாசல் விஜய்
,
நிழல்கள் ரவி
,
ரியாஸ்கான்
,
விஜய்