கள்ளக் கணவர்களிடம் மாட்டி பணம், பொருள், உயிர் அனைத்தையும் இழக்கும் பரிதாப நடிகைகள்..!!

10:46 PM |
திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை சபர்ணாவின் தற்கொலை தான் தற்போது திரையுலகிலும், சீரியல் உலகிலும் பரபரப்பாக பேசப்படுகிற ஒரு  விஷயமாக ..ஆபத்து நிறைந்த விஷயமாகவும்  இருக்கிறது.

என்ன காராணம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்கமும் கொஞ்ச சீரியஸாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன அழுத்தம், பணப்பிரச்சனை, காதல் தோல்வி முக்கியமாக கல்யாணம் ஆன நடிகர்கள், தொழில் அதிபர் மகன்கள் அரசியல்வாரிசுகள் இவர்களின் வலைகளில் எளிதாக சிக்கி விடுகின்றனர்..!

அவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விடுகின்றனர்..! உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கோரும் ‘அந்த’ நேரத்து வார்த்தைகளை உண்மை என்றே நம்பி விடுகின்றனர்..!

எல்லாம் முடிந்து போனதும் அந்த அப்பாவி நடிகையை ஏமாற்றி ஒதுங்க ஆரம்பித்து விட நடிகைகள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் செத்துப் போகும் முடிவிற்கு தள்ளப் படுகின்றனர்..!

பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன்னர் பல நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சோபனா என்கிற அற்புதமான நடிகை அப்படி ஒருவரை நம்பி பணம் பொருள் எல்லாம் இழந்தவர் தான்..!

உயிராக நேசித்த ஒருவர் நடுத்தெருவில் நிறுத்தி விட்டதை அந்த அபலைப் பெண்ணால் தாங்க இயலவில்லை..! பரிதாபமாக இறந்து போனார்..!

ஏராளமான டிவி சீரியல்களிலும் ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாத்   இந்த ஆண்டு மார்ச் மாதம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சீரியல் நடிகை வைஷ்ணவி கடந்த 2006ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்த இரண்டாவது நாளில் இவரது மறைவுக்கு காரணமான சீரியல் நடிகர் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

சரி தொடர்ந்து இப்படி பட்ட சோகங்கள் நடந்து கொண்டே இருக்க சங்கம் இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதோ அல்லது அறிவுரைகள் சொல்லி திசை மாற்றவோ எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுத்ததே இல்லை..!

பரிதாபம்..!
மேலும் வாசிக்க…

அளவுக்கு அதிகமான பணம் மாட்டிகொண்டு முழிக்கும் நடிகர்கள்..!!

10:10 PM |
அண்ணன், தம்பி நடிகர்கள் வீட்டிற்கு முன்பு ஒரு முறை ரெய்டு வந்தபோதே…ஒரு மூட்டை பணம் கைப்பற்றப்பட்டது என்று சொல்லப்பட்டது.

இப்போ…என்ன நிலைமை என்று தெரியவில்லை. ஆனால், பேஸ்தடித்து இருக்கிறார்கள். சொந்தக்காரர்களிடம் கொடுத்து மாற்றுவது என்றாலும் முடிகிற காரியமா?

புயல் காமெடி ஒரு ரூம் பூரா பொட்டி பொட்டியாய் அடுக்கி வச்சி அழகு பார்த்தார். மோடி அறிவிப்பு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எம்புட்டு? எப்படி மாத்தறது?வச்சிட்டான்யா…ஆப்பு…கதை தான்.

அண்ணா…கணக்கில வருவதை அப்பாகிட்ட கொடுங்க. மத்ததை வீட்டுக்கு அனுப்புங்க என்னும் ஹீரோ …இப்போ தான் வெள்ளையா வாங்கறதுன்னு முடிவெடுத்தார். இதுவரை வாங்கியதை என்ன பண்ணுவார்? தூக்கம் வந்திருக்கும்? நடிகரும், கட்சித் தலைவருமானவர் வீட்டிலும், பல கோடிக்கு மூட்டைகள் வைத்துள்ளாராம். எரிப்பாரா? புதைப்பாரா? இது போல ஒவ்வொரு நடிகர்கள் வீட்டிலும் ஒவ்வொரு கதை ஓடுகிறது.
மேலும் வாசிக்க…

முக்கிய புள்ளியிடம் பணம் கேட்கச் சென்ற நடிகை: பின்னர் நடந்ததே வேறு கதை..!!

12:04 AM |
பெண்களை குறி வைத்து செய்யப்படும் பாலியல்ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டன

அதே போல் பணக்காரப் பெண்களை குறி வைத்து, அவர்களை மயக்கி..படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் ஆண்கள் பெருகி விட்டார்கள்.

இவர்களைக் காக்க களம் இறங்கி விட்டார் நயன்தாரா. முதலில் கேரளாவில் இந்த அமைப்பைத்  தொடங்குகிறார்.

அதன் பின் பெரிய நடிகர்கள், வசதி படைத்தவர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் நன்கொடை கேட்க முடிவு செய்து கேரளாவின் ஒரு பெரிய ஹீரோவிடம்  உதவி கேட்டாராம்.

எல்லா விவரமும் கேட்ட அந்த நபர், "சரி தருகிறேன் மகளே, ஆனால் உன் காதலன் எவ்வளவு தந்தார்..? " என்று கேட்க ஆடிப் போனாராம் நயன்..!

அவரும் இயக்குனர் தானே..? முதலில் அவரிடம் சில இலட்சங்கள் வாங்கிகொண்டு என்னிடம் வா..! என்று கூறி அனுப்பி விட்டாராம் அவர்
அவமானத்துடன் கேரளாவில் இருந்து புறப்பட்டாராம் நயன்..?

மேலும் வாசிக்க…

பணம் வாங்கினேன் : ஒரு வழியாக உண்மையை ஒப்புக்கொண்ட சிவா..!!

1:37 AM |
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் தெரிவித்துள்ளார்.

தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். புதுப்படத்திற்காக அவருக்கு முன்பணம் கொடுத்ததாக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவா முன்பணத்தை வாங்கிவிட்டு தங்களுக்கு படம் பண்ணாமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் சிவா மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஞானவேல்ராஜாவிடம் மட்டும் ஒப்பந்த நகல் உள்ளது. மற்ற இருவரும் பணம் கொடுத்துவிட்டு 2 ஆண்டுகளாக காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து பேசப்படும் என டி. சிவா தெரிவித்துள்ளார் என்றார்.
மேலும் வாசிக்க…

வியன்னாவில் தத்தளித்த வித்யூலேகா..!!

11:41 PM |
காமெடி நடிகையான வித்யூலேகாவின் பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆஸ்திரியாவில் திருடப்பட்டதால், ட்விட்டர் மூலம் உதவியை நாடியுள்ளார்.

நீதானே என்பொன்வசந்தம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பிறகு பல ஹிட் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் கலக்கிவருகிறார். சமீபத்தில் நண்பர்களுடன் ஆஸ்திரியா சென்றிருந்த போது பாஸ்போர்ட், மற்றும் முக்கிய ஆவணங்களை ஹோட்டல் வராண்டாவிலேயே திருடப்பட்டதால் தற்போது சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ,எனது   பாஸ்போர்ட், கார்ட், பணம் என அனைத்தும் அடங்கிய பேக் ஹோட்டல் வராண்டாவிலேயே திருடப்பட்டு விட்டது.

எவ்வளவு சீக்கிரம் முடியோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  சிசிடிவி கேமராவில் பதிவான விஷயங்களைக் காண எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஆஸ்திரிய போலீஸார் பார்த்துள்ளனர். ஒரு மனிதர் என்னை திசைதிருப்ப வேண்டி ஒரு முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும் எனக் கேட்டான். நான் எனக்குத் தெரியாது எனக் கூறினேன். அவனது நண்பன் எனக்கு பின்னால் வந்து எனது பேக்கை எடுத்து விட்டான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தியத் தூதரகம் எனக்கு உதவும் என நம்புகிறேன். ஆஸ்திரிய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். நான் நாளை தூதரகத்திற்கு செல்லவிருக்கிறேன். நண்பர்களுடன் நினைத்து மகிழ வேண்டிய பயணமாக இருந்த இந்த ட்ரிப் தற்போது சோகமான முடிவாக அமைந்துள்ளது. பணம், பாஸ்போர்ட் என அனைத்தும் இழந்துவிட்டேன். என் விதி என நினைக்கிறேன்.

பிரதமரின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து உதவி கேட்டுள்ளார் வித்யூலேகா. தற்சமயம் குஷ்பூ உள்ளிட்டோர் ட்விட்டரில் வித்யூலேகாவுடன் தொடர்பிலேயே இருக்கிறார்கள். பல நண்பர்கள் அவருக்கு ஆறுதலும் கூறி வருகிறார்கள். ஒரு ஹோட்டல் வராண்டாவிலேயே இப்படி திருடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள்..!!

12:15 AM |
ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.

அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார்.

அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான்.

மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன். அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன். எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண்இறந்து விட்டாள் என்று. நான்அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்அச் சிறுவனின் அம்மா சடலமாககிடந்தாள் , கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள்
மேலும் வாசிக்க…

எனக்கு பணம் முக்கியம் இல்லை: நடிகை சமந்தா..!!

9:46 PM |
சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறார். விக்ரமுடன் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’, தனுசுடன் நடிக்கும் ‘தங்க மகன்’ படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. சூர்யா ஜோடியாக நடிக்கும் ‘24’ என்ற படத்தின் வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

விஜய்யுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 2 தெலுங்கு படங்களும் அவர் கைவசம் உள்ளன. சக நடிகைகளான அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர்.

முன்னணி கதாநாயகியாக விளங்கும் சமந்தாவுக்கும் அதுபோன்ற படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நல்ல கதைகள் அமையவில்லை. கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தேன். எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் அப்படித்தான் நடிக்க வேண்டும்.

 தற்போது ஒரு நிலையான இடத்துக்கு வந்து விட்டேன். இனி கண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது எனக்கான கதை வேட்டையில் இறங்கி இருக்கிறேன்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடுகிறேன். இனிமேல் பணத்துக்காக மட்டும் நடிக்க வேண்டும் என்பது இல்லை. கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.

என்னை திருப்திப்படுத்தும் கதை அமைந்தால் பணத்தை பெரிதாக பார்க்க மாட்டேன். அதற்காக சம்பளம் உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளவும் தயார். என் முழு நடிப்பு திறமையையும் காட்டும் சாகசத்துக்கு தயாராகி விட்டேன்.

இவ்வாறு சமந்தா கூறினார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com