ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கி வந்தார்கள்.அப்போது கண்டெய்னர் லாரி மோதியதில் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்றவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Tags:
Cinema
,
ஆர்.ஜே.பாலாஜி
,
சினிமா
,
நிக்கி கல்ராணி
,
பிரகாஷ்ராஜ்
,
ஜி.வி.பிரகாஷ்