நடிகர் சங்க தோல்விக்கு பிறகு பல இடங்களில் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் சரத்குமார். தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் பேசிய சரத்குமார் இன்றைய இளைஞர்களின் கல்வி நிலை குறித்து மிகவும் ஆழமாக பேசினார். அவர் கூறுகையில் நான் சாதரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான், சிறு வயதில் சைக்கிள் கடையில் எல்லாம் வேலை பார்த்துள்ளேன்.
மேலும், நான் மொழிகளை கற்றுக்கொள்வதில் வெட்கப்பட்டதே இல்லை, ஆங்கிலத்தில் தவறாக பேசினாலும் பேசுவேன், ஆனால், சில கிராமத்து மாணவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருகையில் ஆங்கிலத்தில் பேச வெட்கப்படுகிறார்கள்.
தயவு செய்து தவறாக இருந்தாலும் பேசுங்கள், எதற்கும் வெட்கப்பட்டு ஒதுங்காதீர்கள்’ என இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.
Tags:
Cinema
,
Sarathkumar
,
சரத்குமார்
,
சினிமா