விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியின் மூலம் பல திரை பிரபலங்களிடம் பேட்டி எடுத்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இதுவரை இளையராஜா, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பல ஜாம்பவான்களை பேட்டி எடுத்திருந்தாலும் ‘தல’ அஜித்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் இவரது விருப்பமாம்.
இதுவரை யாருக்கும் பேட்டி கொடுக்காத அஜித்தை பேட்டி காண வேண்டும் எனவும் அவர் பேட்டி கொடுக்காவிட்டால், அட்லீஸ்ட் அவரை பெர்சனலாக சந்தித்து பேச வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய்யையும் அவர் பேட்டி காணவேண்டுமாம்.
Tags:
Cinema
,
அஜித்
,
இளையராஜா
,
ஏ.ஆர்.ரகுமான்
,
சினிமா
,
டிடி
,
மணிரத்னம்
,
விஜய்