மச்சினிச்சியின் கணவரை பற்றி படம் எடுக்க போகும் தனுஸ்..!!

1:06 AM |
தனுஷ் ஒரு மாஸ் நியூஸ் தரப்போறேன்னு தன் டிவிட்டரில் சொல்லிட்டே இருந்தார். அடுத்த விஜய் படத்தை தயாரிக்கப்போகிறாரா? ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனுஷ் படத்தில் நடிக்கப்போகிற செய்தியா என்றெல்லாம் மக்கள் ஆவலாக எதிர்பார்த்த இந்த சூழலில் …அந்த மாஸ் செய்தியை சொல்லிட்டார் .
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதும், அனிருத் இசை என்பது தான் அந்த செய்தியாம்.

சௌந்தர்யாவுக்கும் அவரது கணவருக்கும் மன வேறுபாடு வந்தபோது, வேலையில்லா பட்டதாரி படம் வந்தது. அந்த படத்தில் அஸ்வின் என்று வில்லனுக்கு பேர் வைத்தது, அப்போது ரஜினி சம்பந்தி வீட்டில் பெரிய கடுப்பை ஏற்படுத்தியது.

இப்போ இரண்டாம் பாகம்…செஞ்சிடுங்க….
மேலும் வாசிக்க…

மச்சினி சவுந்தர்யாவுடன் மும்பைக்கு பறந்த தனுஷ்..!!

12:27 AM |
தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்துடன் மும்பைக்கு சென்றுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்த பிறகு படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் அந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் புதுமுகங்கள் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

தனுஷ்

கதையை கேட்ட ரஜினிகாந்த் ஹீரோவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கேம்மா. நம்ம மாப்பிள்ளை தனுஷையே நடிக்க வை கரெக்டாக இருக்கும் என்று சவுந்தர்யாவிடம் கூறினாராம்.

ஹீரோ

அப்பா ரஜினியே சொன்ன பிறகு சவுந்தர்யா மறுக்கவா போகிறார். இதையடுத்து தனது படத்தின் ஹீரோவாக தனுஷை சவுந்தர்யா தேர்வு செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

சவுந்தர்யா

புதுப்பட வேலைகளில் பிசியாக இருக்கும் சவுந்தர்யா மாமா தனுஷுடன் மும்பைக்கு சென்றுள்ளார். தனுஷுக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூரை ஜோடியாக்க சவுந்தர்யா நினைக்கிறார். இந்நிலையில் அவர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

சோனம்

சோனம் கபூரை சந்தித்து படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சவுந்தர்யாவும், தனுஷும் மும்பைக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோனமும், தனுஷும் ராஞ்ஹனா இந்தி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

சௌந்தர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் அஸ்வின்..!!

1:47 AM |
சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதாக அவரே கூறிவிட்டார்.

மேலும் இனி தனது மகன் வேத் தான் தனக்கு எல்லாமே என்கிற ரீதியிலும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் விவாகரத்து விஷயத்தில் அஸ்வின் தற்போது மனம் மாறிவிட்டாராம். சௌந்தர்யாவுடன் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் சௌந்தர்யா விவாகரத்து விஷயத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

ரேஷ்மி மேனன் பாபிசிம்ஹா விவாகரத்து..!!

12:08 AM |
கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்னவென்றால் நட்சத்திரங்களின் விவாகரத்து தான்.

விஜய் அமலாபால், சௌந்தர்யா அஸ்வின், லிசி ப்ரியதர்ஷன். இவர்கள் மூவரின் விவாகரத்து செய்தி தற்போது வரை சூடுபிடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், இன்னும் சற்று பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக வெளியான தகவல் தான் பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் விவாகரத்து.

6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் வாழ்விலும் புயல் அடித்துவிட்டது, அதனால் இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என செய்திகள் வெளியாகின.

என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லை, வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்பி விடுகின்றனர் என டென்ஷன் ஆகியுள்ளர் பாபி சிம்ஹா.
மேலும் வாசிக்க…

அஸ்வின்-சௌந்தர்யா விவாகரத்திற்கு முக்கிய காரணம்..!!

12:31 AM |
தமிழ் சினிமாவையே நேற்று உலுக்கிய ஒரு தகவல் ரஜினி மகள் விவாகரத்து தான். அஸ்வின், சௌந்தர்யா இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து இருப்பதாக ஒரு செய்தி வந்தது.

இதை சௌந்தர்யாவே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறினார், இதை தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும், இவர்கள் விவாகரத்து வரை செல்ல என்ன காரணம், எதற்காக இந்த முடிவு என பல செய்திகள் உலா வருகிறது.

இதில் சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு விழா தான் இதற்கெல்லாம் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது, அந்த விழாவிற்கு சென்று வரும் வழியில் தான் அருண்விஜய் குடித்து வீட்டு போலிஸ் வாகனத்திலேயே மோதிய நிகழ்வு நடந்தது.

அந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற காரணம் தான் சின்ன சண்டை பெரிதாக விவாகரத்து வரை சென்றதாக கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

ரஜினி மகள் விவாகரத்து செய்கிறாரா? அதிர்ச்சி தகவல்..!!

10:39 PM |
ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். தற்போது சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2010ல் இவர் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நான்கு மாதங்களாக அஸ்வின், சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சௌந்தர்யா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com