என் படத்தில் அரவிந்த்சாமி வேண்டாம் – அஜித் அதிரடி..!!

11:11 PM |
வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

அண்மையில் இப்படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. வேதாளம் படத்தைத் தொடர்ந்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியை படக்குழு தேர்வு செய்ததாம், இதுகுறித்து அஜித்திடம் ஆலோசனை கேட்டபோது, ” என் படத்தில் அவர் வேண்டாம். வேறு யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள்” என்றாராம்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்..!!

1:03 AM |
கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் விரைவில் தொடங்கவுள்ளது. தமிழில் பணியாற்றிய அரவிந்த்சாமி மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் தெலுங்கிலும் பணியாற்றவுள்ளனர்.

ஆனால் தமிழில் ‘ஜெயம்’ ரவி நடித்த ரோலில் தெலுங்கில் ராம்சரண் தேஜாவும் நயன்தாரா ரோலில் ராகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கவுள்ளனர். மோகன் ராஜா திரைக்கதையில் சுரேந்திர ரெட்டி இப்படத்தை இயக்கவுள்ளார்.
மேலும் வாசிக்க…

தென்னிந்திய திரைவிழாவில் விருதுகளை குவிக்கப்போகும் தனி ஒருவன்..!!

11:07 PM |
இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி இந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட விழாவை பிரமாண்டமாக நடத்துகிறது. நாளை ஐதராபாத்தில் தொடங்கும் இந்த விழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த படங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த விழாவின் நடுவர்கள் விருதுக்கு வந்துள்ள படங்களை பார்த்து தேர்வு செய்துள்ளனர். திரைப்படவிழா வட்டார தகவல்களின்படி ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பாகுபலி படம் அதிக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பிரபுதேவா, தேவிஸ்ரீ பிரசாத், பரத், சிவராஜ்குமார், ராம்சரண் தேஜா, ஜீவா, அகில் அக்னினேனி, தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி, பிரியாமணி, ஆகியோர் நடனமாடுகிறார்கள். சாதனை கலைஞர்கள் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாசுதேவன் நாயர், சித்தலிங்கையா கவுரவிக்கப்படுகிறார்கள்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com