ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் கருத்து வேறுபாடு..!!

11:56 PM |
உலக அழகி பட்டம் வென்று இந்தி பட உலகில் கதாநாயகியாகி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யாராய். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யாராய் தமிழில் இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

கர்ப்பமாக இருந்த போது சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து முடித்துள்ள ஏ தில் ஹாய் முஸ்கில் என்ற படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யாராய் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணத்துக்கு முன்பு நடித்த படங்களில் இந்த அளவுக்கு கவர்ச்சியாக அவர் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்காக கதை கேட்டபோது படத்தின் இயக்குனர் கரன் ஜோகர் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்று சொல்லவில்லையாம்.

படத்தில் அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு கதைக்கு கவர்ச்சி தேவை என்று ஐஸ்வர்யாராயே டைரக்டரிடம் வற்புறுத்தி இந்த காட்சிகளை படமாக்க வைத்ததாக கூறப்படுகிறது.இந்த மாதம் இறுதியில் ஏ தில் ஹாய் முஸ்கில் படம் திரைக்கு வருகிறது. ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்து இருப்பது அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது. அவரது மாமியார் ஜெயாபச்சன் கோபத்தில் இருக்கிறாராம்.

அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யாராயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக மும்பை பட உலகில் தகவல் பரவி உள்ளது. இந்த நிலையில் மும்பையில் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியொன்றில் மீண்டும் சல்மான்கானுடன் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, வலுவான கதையும் திறமையான டைரக்டரும் அமைந்தால் சல்மான்கானுடன் நடிப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யாராயும் சல்மான்கானும் ஏற்கனவே காதலித்து பின்னர் தகராறு ஏற்பட்டு பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து நடிக்க தயார் என்று ஐஸ்வர்யாராய் கூறி இருப்பது அபிஷேக் பச்சனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க…

ஜனாதிபதி கையில் தேசிய விருதுகளை வாங்கிய நட்சத்திரங்கள்..!!

10:32 PM |
இந்திய சினிமாவின் உயரிய கௌரம் என்றால் அது தேசியவிருது தான். அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்களின் விபரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கும், சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனர் விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு பாஜிரா மஸ்தானி படத்துக்காக வழங்கப்பட்டது.சிறந்த படமாக பாகுபலியும், தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டது. துணை நடிகர் விருதை விசாரணை படத்துக்காக சமுத்திரக்கனி வாங்கினார்.

சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோர் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு வாங்கினார். சிறந்த இசையமைப்பாளராக தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com