சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை புலனாய்வு செய்வதற்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து அவரது டைரி மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சினிமா புள்ளி ஒருவரை சபர்ணா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது சபர்ணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
இதனால் சபர்ணாவுக்கும், பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சபர்ணாவின் தோழிகள் கூறுகின்றனர். அதன்பிறகே சபர்ணா கடந்த ஒரு ஆண்டாக பெற்றோரை விட்டு பிரிந்து மதுரவாயல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஸ்டண்ட் நடிகருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார். இந்த வீடு கீழ் தளத்தில் உள்ள அறையில் இருந்தபடியே மேல் முதல் மாடிக்குச் செல்லும் வசதி கொண்டது.
இந்நிலையில், திடீரென வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் அவர்கள் சந்தேகம் கொண்டு போலீசுக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து பார்த்த போது படுக்கை அறையில் முழு நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார் சபர்ணா. அருகில் அவரது ஆடை கழட்டி வைக்கப்பட்டிருந்தது. அவரது இடது கை மணிக்கட்டில் வெட்டு காயம் இருந்தது. கத்தியால் கீறியிருந்தது போல் தெரிந்தது. அவராகவே கிழித்து கொண்டதா அல்லது யாரும் அவரை காயப்படுத்தியதா என தெரியவில்லை.
அக்கம் பக்கம் தினரிடம் துருவித் துருவி விசாரித்தனர். சபர்ணா தற்கொலை செய்வதென்றால், தூக்க மாத்திரை சாப்பிட்டோ, கயிற்றில் தொங்கியோ அந்த முடிவெடுத்திருக்கலாம். ஆனால், அவர் நிர்வாண கோலத்தில் கிடந்ததால், அவரை யாராவது பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: சபர்ணா வீட்டுக்கு நாங்கள் சென்ற போது, கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. தாளிடாமல் மூடியிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது. நிர்வாணமாக சபர்ணா பிணமாக கிடந்தார். சடலத்துக்கு அருகில் சிறிய கத்தி எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்துதான் மணிக்கட்டை அறுத்து கொண்டாரா என்றும் விசாரிக்கிறோம். கடையில் இருந்து டீ வாங்கி குடித்த 20 கப்புகள் இருந்தன. அதில், பல கப்புகளில் சிகரெட் துண்டுகள் அணைக்கப்பட்டிருந்தது.
அவையனைத்தும் வெவ்வேறு பிராண்டுகள். மது வாங்கிக் குடித்துள்ளனர். மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை அங்கு பயன்படுத்தியதற்கான அடையாளங்களும் இருந்தன. சபர்ணாவுக்கு போதை பழக்கம் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று பிற்பகலில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பிரேத பரிசோதனை முடிந்தவுடன் சபர்ணாவின் உடலை திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர் கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Tags:
Cinema
,
கற்பழிப்பு
,
கொலை
,
சபர்ணா
,
சினிமா
,
தகராறு
,
தகவல்கள்