ரவுண்டா ஒரு கோடி கொடுங்க கதறடிக்கும் வாரிசு ஹீரோயினி..!!

11:34 PM |
ரத்தினமான தயாரிப்பாளர் அடுத்து வெற்றிபதியை வைத்து படம் தயாரிக்கிறார். ஹீரோயினாக நடிக்க புகழ்பெற்ற வாரிசு நடிகையை அணுகினார்களாம்.

என் மகள் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறாள். தேதிகள் இல்லை. இருக்கிற தேதியை அட்ஜெஸ் செய்து தருகிறோம். ரவுண்டா ஒரு கோடி கொடுத்திடுங்க என்றாராம் மாஜி ஹீரோயினான தாய்குலம். அவ்வளவு பட்ஜெட் இல்லை என்ற தயாரிப்பாளர் தற்போது வேறு ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

வாரிசு நடிகைக்கு ஆப்பு வைத்த அழுகாச்சி ஹீரோ கிடுகிடு தகவல்கள்..!!

12:51 AM |
அழுகாச்சி ஹீரோ (டிவி ஹீரோவை இந்த மூணு நாளா அப்படித்தான் பாஸ் சொல்றாங்க வாரிசு நடிகையும் முதல் படத்தில் ஜோடி சேர்ந்தபோதே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

அடுத்த படத்திலும் அது தொடர்ந்து நடிகையின் அக்கா கல்யாணத்தில் மாப்பிள்ளை பொண்ணு கோலம் வரைக்கும் போனது.

அந்த கெமிஸ்ட்ரி அப்படியே நீடிப்பதால் அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவார் என எதிர்பார்த்தார் நடிகை. ஆனால் ஹீரோ முடியாது என சொல்லி சர்ச்சை, காத்தாடி என்று வரிசையாக பெரிய ஹீரோயின்களாக புக் பண்ணிவிட்டார். அப்ப அதுக்கும் அடுத்த படம்? அதிலும் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

கிசுகிசுக்காக பயப்படவில்லை. ஒரே ஹீரோயினுடன் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று காரணம் சொல்லியிருக்கிறார். போரடிப்பது ரசிகர்களுக்கா? உங்களுக்கா? என்று கேட்டுவிட்டு அதோடு ரிலேஷன்ஷிப்பை கிடுகிடுவென பிரேக் அப் செய்துவிட்டாராம் நடிகை.
மேலும் வாசிக்க…

ரயிலில் வந்த விரிசல்..!!

11:32 PM |
படம் எப்படியோ ஆனாலும் ரயில் படத்தில் ஒல்லி பிச்சான், வாரிசு நடிகை கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருந்தது.

இதை மனதில் வைத்து ஒல்லிபிச்சான் கால்ஷீட்டை கையில் வைத்திருக்கும் ஒரு இயக்குனர், வாரிசு நடிகையை சந்தித்து கால்ஷீட் கேட்டு போயிருக்கிறார்.

கதையை கேட்டு வியந்த வாரிசு நடிகை கதை ஒகே ஹீரோ யார் என்று கேட்டிருக்கிறார். ஒல்லிபிச்சான் தான் என்று சொன்னதும் அம்மாவும் மகளும் சேர்ந்து சாமியாட்டம் ஆடிவிட்டார்களாம்.

ரயில் படத்தின் போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா வரக்கூடாதுன்னு போட்ட கண்டிஷன்லேருந்து நடிகர் கொடுத்த டார்ச்சரை அடுக்கடுக்காக சொன்ன வாரிசு நடிகை, இனி அவர்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லி அனுப்பிட்டாராம். ரயில் படம் லேட்டானதுக்கு இருவருக்கும் இடையே இருந்த உரசலும் ஒரு காரணம் என்று இப்போது செய்தி கசிந்திருக்கிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com