சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் சக்சஸ் மீட்டில் திடிரென சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு எங்கள் வேலையை செய்யவிடுங்கள் என உணர்ச்சிவசப்பட்டார்.
இதற்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசிக்கையில், இப்படத்தை வாங்கி வெளியிட்ட திருப்பூர் சுப்பிரமணி இதுபற்றி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, மான்கராத்தே எடுத்த 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதன், மற்றும் வேந்தர் பிலிம்ஸ் மதன், இருவரும் சிவகார்த்திகேயனிடம் புதுப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து இருப்பதாகச் சொல்கின்றனர். சிவகார்த்திகேயனோ இரண்டு மதன்களிடம் இருந்தும் 'நான் அட்வான்ஸ் பணம் வாங்கவில்லை' என்று மறுக்கிறார்.
'எஸ்கேப்' மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கிறார். அந்த மன உளைச்சலில் இருந்ததால் சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார் என்று விளக்கமளித்துள்ளார்.
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
மதன்
,
மான்கராத்தே
,
ரெமோ
,
வெளிவந்த உண்மை