உள்ள அழுகிறேன்..வெளில சிரிக்கிறேன்.. நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்..! இந்தப் பாடல் இப்போது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே பொருந்தும்..!
நல்ல வெற்றிப் படங்கள் கொடுத்ததும் கூட அதை அனுபவிக்க முடியாமல் ஏகப் பட்ட மன உளைச்சல்..! மொத்தமாக என்ன காரணம் என்று கேட்டால் அந்த பெரிய இடத்து மாப்பிள்ளையை கை காட்டுகிறது கோடம்பாக்கம்..!
அறிமுகம் செய்தவருக்கே ஆப்பு வைப்பது. காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதுமே காரணம் என்கிறார்கள்.
அதைவிட கொடுமை ‘அவரை’ விட நான்தான் பாப்புலர் என்று சிவா சொன்னதாக மீடியாக்கள் கிளப்பிவிட ‘அவர்’ தரப்பில் இன்னும் கோபம் அதிகமாகியது.
இவனை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை என்பது போல் களம் இறங்க, நடந்த விஷயங்கள் அத்தனையும் சிவாவிற்கு ஆப்பு வைத்தது..!அதனால்தான் சினிமா விழா மேடையில் கதறி அழுதாராம்.
எல்லாம் அறிந்த சிவாவின் நண்பர்கள். ஒழுங்கா அவரிடம் சரண்டர் ஆகிவிடு. அவர் இப்போது மிகப் பெரிய இடம்..! உன் குடும்பதைக் கூட அவரால் பிரித்து விட முடியும். நீ வளர்ந்து வருகிறாய்..! கெடுத்துக் கொள்ளாதே என்று அட்வைஸ் செய்திருகிறார்கள்..!
அதே போல அந்த ‘பால்’ நடிகையும் தனியாக சிவாவை போனில் அழைத்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணினாராம்..!
தூதுவர் ஒருவர் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். ஹீரோ..! பாவம் தான்..!!
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
டைவர்ஸ்
,
பால் நடிகை
,
ரெமோ