அஜித்தின் முதல்படமான ‘அமராவதி’ பட நாயகியும், விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே, நிலவே வா போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை சங்கவி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தன்னிடம் கோபப்பட்ட சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்.
பொதுவாக விஜய் ரொம்ப அமைதியானவர் என்றும் படத்தில் இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு நேர்மாறானவர் என்றும்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்,. ஆனால் முதல்முறையாக ஆத்திரக்கார விஜய் குறித்து சங்கவி என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘விஷ்ணு’ படத்தில் நடித்தபோது, குளிர்ந்த நீரில் விஜய்யும் நானும் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. தண்ணீர் ரொம்ப குளிராக இருந்ததால் இருவருமே குதிக்க தயங்கினோம். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர், குதி என்று சொன்னதும் பயத்தில் நான் உடனே தண்ணீரில் குதித்துவிட்டேன். ஆனால் விஜய் குதிக்கவில்லை.
அந்த பொண்ணு தைரியமாக குதித்த நிலையில் நீ ஏன் குதிக்கவில்லை என்று விஜய்யை எஸ்.ஏசி திட்டினார். அப்போது விஜய் என்னை ஆத்திரத்துடன் ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையை என்னால் மறக்கவே முடியாது’ என்று கூறினார்.
Tags:
Cinema
,
அமராவதி
,
உண்மை சம்பவம்
,
சங்கவி
,
சினிமா
,
நடிகை
,
விஜய்