சினிமா பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் பிரபலங்களில் இவர் இறந்துவிட்டார், அவர் இறந்துவிட்டார் என அதிகமான வதந்திகள் வருகின்றது. அதில் அண்மையில் சிக்கிய பிரபலம் கவுண்டமணி.
இவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்படி புரளியை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும படத்தின் அறிவிப்பு வெளிவரும்.
அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
கவுண்டமணி
,
சினிமா
,
மரணம்
,
மாரடைப்பு
,
வதந்திகள்