சென்னையை சேர்ந்த பெண் உமாதேவி பிரபல நடிகை ராதா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, தன்னிடம் இருந்து கணவரை பிரிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உமா தேவி அளித்துள்ள புகாரில், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்துள்ள ராதா என்பவர் என்னிடமிருந்து எனது கணவரை பிரிக்க பார்க்கிறார்.
இதுதொடர்பாக ஏற்கனவே நான் விருகம்பாக்கம் மற்றும் மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் மனு அளித்திருந்தேன், அவர்களும் எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் தொடர்ந்து ராதா என் கணவருக்கு போன் செய்கிறாள், எங்கள் குடும்பத்தை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, என்னையும், என் மகளையும் மிரட்டுகிறார்.
எனவே ராதாவிடமிருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு முதல் தன்னுடைய கணவரை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரும்படியும் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
உமாதேவி
,
சினிமா
,
சுந்தரா டிராவல்ஸ்
,
பிரபல நடிகை
,
ராதா