விபசார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவுக்கும் இந்தி பட இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
தமிழில் ’ராரா, சந்தமாமா’ படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா பாசு. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014ல் இவர் விபசார வழக்கில் சிக்கினார். ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததன் பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் அறையில் நடிகை ஸ்வேதா பாசு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்ததாக போலீசார் கையும், களவுமாக பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஸ்வேதா பாசுவை, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விபசார வழக்கில் ஸ்வேதா பாசு கைதானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 மாதங்கள் பெண்கள் காப்பகத்தில் இருந்த அவரை பின்னர் கோர்ட்டு விடுதலை செய்தது.
ஸ்வேதா பாசு மீது பரிதாபப்பட்ட பிரபல இந்தி பட டைரக்டர் அனுராக் காஷ்யப் தனது படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்தார். இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடிக்கவும் ஸ்வேதா பாசுவுக்கு அழைப்புகள் வந்தன. தற்போது அவர் டி.வி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கும் இந்தி திரையுலகில் வளரும் இளம் இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் டைரக்டர் அனுராக் காஷ்யப் அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி அவர்கள் காதலை உறுதிபடுத்தி உள்ளன. விரைவில் திருமணம் செய்து கொள்ள அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
அனுராக்
,
சினிமா
,
டைரக்டர்
,
நடிகை
,
விபசாரம்
,
ஸ்வேதா பாசு