கபாலி டிக்கெட் கிடைக்காமல் ரசிகர் தற்கொலை! அதிர்ச்சி வீடியோ
கபாலி படத்திற்கு அனைவரும் போட்டி போட்டு கொண்டு டிக்கெட்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லா இடங்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டு நாட்களிலே விற்பனை செய்யப்பட்டு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரையரங்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக போலி காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
படத்திற்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இது பொய்யான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளி சீனாவில் இடம்பெற்ற வேறொரு சம்பவத்துடன் தொடர்புபட்டதென ஊடகங்கள் சில சுட்டிக்காட்டியுள்ளன. தற்போது இச்சம்பவத்தின் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..