சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா பற்றி யாரும் அறிந்திராத 10 உண்மைகள்..!!
சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதாவை பற்றி அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ ரக்ஷிதா மார்ச் 27ம் தேதி 1984ம் ஆண்டு கன்னட மண்ணில் பிறந்திருக்கிறார். பள்ளி படிப்பை முடித்த இவர் Master’s degree in Journalism and Mass Communication பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.
தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் இவர் கன்னட தொலைக்காட்சியில் Vj வாக ராணி மகாராணி, ஸ்டார் சுவிருசி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2013ல் இளவரசி என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமான இவங்க, பிரிவோம் சந்திப்போம் என்ற தன்னுடைய இரண்டாவது தொடரிலேயே கருப்பு மேக்கப் போட்டு நடித்திருப்பார். இதுதவிர மசாலா குடும்பம் என்ற தொடரில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த தொடர் சரவணன் மீனாட்சி. இப்போது அதில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.
வேறு நிறைய ஒப்பந்தங்கள் இருந்ததால் முதல்ல இவங்க சரவணன் மீனாட்சில நடிக்க மறுத்திருக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் தான் சரியாக இருப்பார் என்று அத்தொடர் குழுவினர் எண்ணியதால் ஒப்புக்கொண்டுள்ளார்.