பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களே கூட இப்படி இறங்கிவிடுவதற்கு காரணம், நிச்சயம் சினிமாதான் என்றொரு கருத்தும் உலவி வருவதால், கொடுக்காப் புளியை விழுங்கிய மாதிரி இருக்கிறது கோடம்பாக்கம். “சமுதாயத்துல நடக்கறதைதான் நாங்க எடுக்குறோம்” என்று இவர்களும், “நீங்க எடுக்கறதாலதான் சமுதாயம் கெடுது” என்று அவர்களும் இரு குழுவாக பிரிந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு கொலைக்கு பின்பும் சில வாரங்களுக்கு கேட்கும் கருத்து சப்தம், சுவாதியின் படுகொலைக்குப்பின் இப்போது உரக்க கேட்க ஆரம்பித்திருக்கிறது.
சுவாதி கொலை தொடர்பாக இன்று காலையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், நம்ம விஜய் சேதுபதியை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார். நல்லவேளை… இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை வி.சே. (வந்திருந்தால் என்னாகியிருக்குமோ?)
பெண்களுக்கு ஆதரவான படம் என்று சொல்லப்பட்ட இறைவி படத்தைதான் ஒரு பிடி பிடித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பெண்களை உயர்வு படுத்துறேன்னு சொல்லிட்டு கடைசி ஐந்து நிமிஷம் மட்டும் அவங்களுக்கு ஆதரவா கருத்து சொன்னால் போதுமா? அதுவும் இந்த மாதிரி படங்களில் விஜய் சேதுபதி நடித்ததை சகித்துக் கொள்ளவே முடியாது. படம் முழுக்க வன்முறை. பல இளம் பெண்கள் விஜய் சேதுபதியின் ரசிகைகளாக இருக்காங்க. அப்படிப்பட்டவருக்கு ஒரு பொறுப்பு வேண்டாமா? தான் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து நடிக்க வேண்டாமா? என்றெல்லாம் போட்டுத்தாக்கினார்.
என்னம்மா இப்படி சொல்றீங்களேம்மா?
Tags:
Cinema
,
சினிமா
,
சுவாதி கொலை
,
லட்சுமி ராமகிருஷ்ணன்
,
விஜய்சேதுபதி