நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட் முடிந்தும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.
இதற்கு எதிராக அஜித் பேசியதாக ஒரு கருத்துநிலவி வருகிறது. இதனால் இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அஜித்துக்கெதிராக ராமனுஜம் என்ற ஒருவரின் பெயரில் வாட்ஸ்அப் பதிவு ஒன்று பரவி வருகிறது.
இதில் அஜித் நடித்த படங்கள் பிரச்சினையில் சிக்கிய போது, நடிகர் சங்கம் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க நல நிதிக்காக கிரிக்கெட் போட்டி நடத்தி, நிதி திரட்டுவது சங்கத்தின் முடிவு. விருப்பமுள்ளவர்கள், டிக்கெட் எடுத்து பார்த்தனர். நடிகர் சங்கம் யாரையும் கட்டாயப்படுத்தி, பார்க்க சொல்லவில்லை.
விருப்பம் இல்லையென்றால்
நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு வந்து, தன் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும். அல்லது தலைமைக்கு தன் கருத்தை கடிதம் மூலமாகவோ, பத்திரிக்கைகளில் அறிக்கை வாயிலாகவோ தெரிவித்து இருக்க வேண்டும். இதை விடுத்து, ரசிகர்களை, நடிகர் சங்கத்திற்க்கு எதிராக தூண்டிவிடுவது நாகரிகமான செயல் இல்லை.
அஜித் நடித்து வெளியான, வேதாளம் பட டிக்கெட், தியேட்டர்களில், 300 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதை எதிர்த்து அஜித் கருத்து சொல்லவோ, கண்டிக்கவோ இல்லை. காரணம் இவர், ஒரு படத்தில் நடிக்க, 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதால், அதிக விலைக்கு படத்தை தயாரிப்பாளர் விற்க வேண்டிய நிலை உருவானது. அதனால், டிக்கெட் விலையும் கூடியது. இந்த நிலையில், நியாயம் பேச அஜித்துக்கோ, அவரது ரசிகர்களுக்கோ என்ன தகுதி இருக்கிறது.
நடிகர் சங்க முடிவு பிடிக்கவில்லை என்றால், நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து, அஜித்குமாரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம். நலிந்த நடிகர்களின் நலனுக்காக நடிகர் சங்கம் எடுக்கும் முயற்சிகளை பாராட்ட மனமில்லை என்றால், மவுனமாக இருந்து விட வேண்டும். அஜித்குமாரை திரையுலகம் விலக்கி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் இந்த தகவல் வெளியாகியுள்ளது.அஜித் எங்கே அப்படி சொன்னார், சொல்லுங்க பார்ப்போம்- உண்மையை உடைத்த எஸ்.வி.சேகர்
Tags:
Ajith Whatsapp
,
Cinema
,
அஜித்
,
சினிமா