அட்லீ இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இசை வெளியாகும் அதே நாளில் இப்படத்தின் டிரைலரும் வெளிவரும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் டிரைலர், இசை வெளியாகி ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவரது இசையில் உருவாகியிருக்கும் 50-வது படமாகும். மேலும் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
Tags:
Cinema
,
அட்லீ
,
எமி ஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா
,
டிரைலர்
,
தெறி
,
விஜய்
,
ஜி.வி. பிரகாஷ் குமார்