இது நம்ம ஆளு படம் சிம்பு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படம். ஏனென்றால் சிம்பு, நயன்தாரா இருவரும் வல்லவன் படத்திற்கு பிறகும், காதல் பிரிவிற்கு பிறகும் இணைந்து நடித்திருக்கும் படம்.
தற்போது இப்படத்தில் சிம்புவின் முன்னாள் காதலியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அடா சர்மா. இவர் இடம்பெறும் காட்சிகள் மற்றும் மாமன் வெயிட்டிங் என்ற பாடல் இன்று படமாக்கப்பட இருக்கிறது.
பாண்டியராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Tags:
Cinema
,
அடா சர்மா
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சிம்பு ரசிகர்கள்
,
சினிமா
,
நயன்தாரா
,
வல்லவன்