சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை, சந்தித்து அந்தணர் முன்னேற்றக் கழகம் என்ற சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனுவில் சமீபத்தில் வெளிவந்துள்ள பிச்சைக்காரன் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்துக்கள் புனிதமாக மதிக்கும் காயத்ரி மந்திரம் வன்முறை காட்சிகளுக்கு பின்னணி இசையாக பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை, பிச்சைக்காரர்கள் போல இழிவாக பேசும் காட்சிகளும், பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் அதனால் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவை கொடுப்பதற்காக ஏராளமான அர்ச்சகர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
Tags:
Cinema
,
அர்ச்சகர்கள்
,
காயத்ரி மந்திரம்
,
சினிமா
,
பிச்சைக்காரர்கள்
,
பிச்சைக்காரன்