தனது படங்களில் நன்றாக பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய நடிகைகள் இடம்பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருபவர் விஜய்சேதுபதி. அந்த வகையில், காயத்ரி, ரம்யா நம்பீசன், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, மடோனா என குறிப்பிடத்தக்க நடிகைகளுடன் நடித்து வந்த அவர், தற்போது தர்மதுரையில் தமன்னாவுடன் நடித்திருப்பவர், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் ஆண்டவன் கட்டளையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே ரெக்க படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.மேலும், இதற்கு முன்பு ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்து நடித்த விஜய் சேதுபதி இந்த ரெக்க படத்தையும் தானே தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் வேலைகள் கடந்த சில மாதங்களாக அவருடைய அலுவலகத்தில் நடந்து வந்தது.
மேலும், விஜயசேதுபதி சொந்த படம் தயாரிக்கிறார் என்றதும் அவரது அபிமானத்திற்குரிய சில ஹீரோயின்கள் அவரிடத்தில் சான்சு கேட்டு வந்த நிலையில், அந்த கதைக்கு லட்சுமிமேனன் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஓகே செய்திருக்கிறாராம் விஜய்சேதுபதி. இதற்கு முன்பு சசிகுமார்-லட்சுமிமேனன் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
தமன்னா
,
நயன்தாரா
,
மடோனா
,
லட்சுமிமேனன்
,
விஜய்சேதுபதி