வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள்.
படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்வையிட்ட செய்தியால் படக்குழுவினர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை, கேரளாவில் தான், விஜய் படங்கள் வசூலை குவிக்கும். இப்போது, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கல்லா கட்டும் வகையில், தெலுங்கிலும் இந்த படத்தை, ‘டப்’ செய்து வெளியிடும் வேலை தீவிரமாக நடக்கிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
படக்குழுவினர்
,
விஜய்
,
விஜய் ரசிகர்கள்