தல 57 படம் ஆரம்பம் - கசிந்தது தகவல், ரசிகர்கள் பூரிப்பு..!!

2:43 AM |
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான தல57 (தற்போதைய தலைப்பு) மே 1 அஜித்-ன் பிறந்தநாள் அன்றே துவங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்க்கான பணியில் முழுவீச்சில் படக்குழுவினர் இறங்கியிருகின்றனர்.

 இந்த படத்தில் அஜித்-திற்கு கதாநாயகியாக பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட கடைசியில் அனுஷ்க்காவிற்க்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். மேலும், க்ரித்தி சாணான் என்ற புதுமுக நடிகையும் இரண்டாவது ஹீரோயினாக வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிருவனத்தால் தயாரிக்கப்பட இருக்கிறது. சிறுத்தை சிவா கதை திரைக்கதை எழுதியுள்ளார். மேலும், இப்படத்தின் தலைப்பும் ரசிகர்களால் யூகிக்க கூடிய வகையில் உள்ளது VeeraM, VedhalaM  போன்று இப்படத்தின் தலைப்பும் V-ல் தொடக்கி M-ல் முடியகூடியதாய் இருக்க கூடும் என தல ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தன இசையமைப்பார் என்று தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், இசையமைப்பாளர் குறித்து தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ, அஜித்-ன் 45வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த செய்தி ரசிகர்கள் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

தெறி வெற்றி பிரம்மாண்டமாக கொண்டாடிய விஜய் ( படம் உள்ளே )

11:11 PM |
ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விஜய்யின் தெறி. தமிழகத்திலும், கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு அபார வரவேற்பு தந்துள்ளனர்.

இதனால் தெறி படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்புக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 'தெறி படம் அனைவருக்கும் பிடித்த படமாக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி' என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மேலும் வாசிக்க…

தெறிக்கு அரசாங்கம் வழங்கிய சலுகை – சந்தோஷத்தில் படக்குழு..!!

12:21 AM |

இன்று உலகம் முழுவதும் தெறி படம் வெளியாகியுள்ளது. ஆனால் பல இடங்களில் திரையரங்கு கிடைக்காமல் உள்ளது. இதனால் சில இடங்களில் கலவரமும் நடந்துள்ளது.

மேலும் படம் யு சான்றிதழ் கிடைத்தபோதும் தேர்தல் நேரம் என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தெறிக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது.

இதனால் பாக்ஸ்ஆபிஸ் வசூல் காப்பாற்றப்படும் என்பதால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.


மேலும் வாசிக்க…

ரசிகர்களின் “தவம்” – இதற்காகவா ஆச்சர்யத்தில் தெறி டீம்..!!

1:33 AM |
வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள்.

படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்வையிட்ட செய்தியால் படக்குழுவினர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை, கேரளாவில் தான், விஜய் படங்கள் வசூலை குவிக்கும். இப்போது, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கல்லா கட்டும் வகையில், தெலுங்கிலும் இந்த படத்தை, ‘டப்’ செய்து வெளியிடும் வேலை தீவிரமாக நடக்கிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com