இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவருக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இதை தொடர்ந்து கோச்சடையான், லிங்கா படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் தற்போது கபாலி, 2.0 என காலில் சக்கரம் கட்டி நடித்து வருகிறார்.
நேற்று திடிரென்று மீண்டும் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த ரசிகர்கள் பலரும் அந்த மருத்துவமனையில் கூட அந்த இடமே பத்தட்டமானது.
பின்னர் சில மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார். இச்செய்தி அவருடைய ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
2.0. Cinema
,
கபாலி
,
சினிமா
,
ரஜினி
,
லிங்கா