தற்போது ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் 1000 ஃபாலோயர்ஸ் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை மூவி க்ரிட்டிக் என்று சொல்லி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட யாரோ ஒரு க்ரிட்டிக் உதயநிதி நடித்து வெளிவந்துள்ள கெத்து படத்தைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்துவிட்டார் போலிருக்கிறது. “பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ரசிகர்களுக்காக மட்டும்தான் படம் எடுக்கிறேன்.
ஒரு விமர்சகர் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெளிவந்த அன்று அந்தப் படத்தைப் பற்றி மோசமாக எழுதியிருந்தார்.
ஆனால், அந்தப் படம் மாபெரும் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், அவருடைய விமர்சனத்தை நீக்கி விட்டார். அப்படிப்பட்ட பணம் வாங்கிக் கொண்டு விமர்சிக்கும் டுபாக்கூர் விமர்சகர்கள் முகத்தில் விடப்படும் குத்துதான் கெத்து படத்தில் பாரில் நடைபெறும் சண்டைக் காட்சியின் முதல் குத்து,” என யாரையோ குறிப்பிட்டுத் தாக்கியிருக்கிறார்.
Tags:
Cinema
,
Gethu
,
உதயநிதி ஸ்டாலின்
,
கெத்து
,
சினிமா