சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்அச்சம் என்பது மடமையடா. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் தள்ளி போகாதே என்ற பாடல் சமூக வலைதளத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே பிரபலமான பாடலாக மாறி வருகிறது.
இந்த பாடல் ரீமிக்ஸ், டப் ஸ்மாஷ் என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து, அவற்றை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள, திறமையான இசையமைப்பாளர்கள் பங்குகொள்ள உள்ள போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷாகிர் முனீர், இந்த வகை போட்டிகள் ரசிகர்கள் இடையே மேலும் ஆர்வத்தை தூண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:
Achcham enbathu madamaiyada teaser
,
Cinema
,
simbu
,
சிம்புவின் தள்ளிபோகதே பாடல்
,
சினிமா