நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த 2015-ம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஜெயம் ரவியிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன கதாபாத்திரம் எது?என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, சரித்திரப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற தனது ஆசை இன்னும் நிறைவேறாமல் இருப்பதாக கூறியுள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள முதல் ஜோம்பி தமிழ் படமான மிருதன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Tags:
Cinema
,
Jayam Ravi
,
சினிமா
,
ஜெயம் ரவிக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம்