சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை வெடிகுண்டு ரூபத்தில் வெடித்துள்ளது.
சென்னை போரூரில் உள்ள டி.ராஜேந்தர் பங்களாவில் வெடிக்குண்டு வெடித்துள்ளது என யாரோ, காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்ட உடனே அந்த இடத்திற்கு போலிஸார் செல்ல அப்படி குண்டு வெடித்ததற்கான அறிகுறியே இல்லை.
இதை தொடர்ந்து பேசியது யார் என்று போலிஸார் அந்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்ட போது ஒரு பெண் பேசியுள்ளார். பின் அவர் அந்த போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். இதுக்குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்பு வீட்டில் வெடித்த வெடிகுண்டு
,
சினிமா