சின்னத்திரை தொகுப்பாளியாக இருந்த ரம்யா, இப்போது முழுநேர சினிமா நடிகை மற்றும் மாடல் அழகியாகிவிட்டார். கணவனை பிரிந்த பிறகு எந்த தடையும் இல்லாமல் சுதந்திரமாக நடிப்பு, நடனம், மாடலிங் என்று இறங்கிவிட்டார். ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையானவர் தற்போது 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மற்ற மொழிகளிலும் கதை கேட்டு வருகிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சின்னத்திரை லைவ் ஷோக்களில் நடனம் ஆடுகிறார். பல விளம்பர படங்களில் நடிக்கிறார். விளம்பர மாடலாகவும் ஆகியிருக்கிறார். ஜிஆர்டி கிராண்ட் ஸ்பா என்ற நிறுவனத்தின் 2016ம் ஆண்டின் காலண்டருக்கு கலக்கான போஸ் கொடுத்திருக்கிறார். அவைகள் ஜனவரி இறுதியில் வெளியாகி பரபரப்பை கிளப்ப இருக்கிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
மாடலிங்கில் கவனம் செலுத்தும் ரம்யா
,
ரம்யா