மைனா படத்தில் மலையையும்இ கும்கி படத்தில் யானையைும்இ கயல் படத்தில் கடலையும் பின்னணியாக வைத்து படம் இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரபு சாலமன். தற்போது அவர் ரயிலை பின்னணியாக வைத்து ஒரு காதல் படத்தை இயக்கி உள்ளார். அதில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முழு கதையும் ரயிலில் தான் நடக்கிறது . மேலும் ஒரே நாளில் நடக்கும் கதை. டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயிலில் கேண்டின் பாயாக வேலை பார்க்கிறார் தனுஷ். இவர் பெயர் பூச்சியப்பன் இ அதே ரயிலில் மலையாள பெண்ணாக பயணிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் ஒரு நடிகையின் டச் அப் கேர்ள். டெல்லியில் படப்பிடிப்பு முடித்து விட்டு கிளம்பும் பட குழுவுடன் வருகிறார்.
பயணத்தின் போது இருவரும் சந்திக்கின்றனர். பேசிக்கொள்கின்றனர்இ இருவரின் வாழ்க்கை கதையையும் பரிமாறி கொள்கின்றனர். ரயிலில் இருவருக்கும் காதல் மலர்கிறது. காதல் அதிகமாகும் போது அங்கு ஒரு பெரிய பிரச்னை பூகம்பம் போல வெடிக்கிறது. அது என்ன ? அதில் இருந்து மீண்டு இருவரும் காதலில் ஜெயித்தார்களா என்பது தான் கதை . ரயில் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்குள் கதை முடிந்து விடும்.
Tags:
Cinema
,
dhanush
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
ரயில் படத்தின் கதை