Kodi - Official Tamil Trailer | Dhanush, Trisha | Santhosh Narayanan

1:12 AM |
மேலும் வாசிக்க…

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ்..!!

11:39 PM |
தமிழ், இந்தி திரையுலகைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் படத்தில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ்.

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'ஆடுகளம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது நடிகனாக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

இந்தியில் 'ராஞ்சனா (Raanjhanaa)' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.

பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷூடன் இணைந்து ‎UmaThurman‬ மற்றும் ‎Alexandra Daddario‬ முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தை Marjane Satrapi என்ற இரான் மற்றும் ப்ரெஞ்ச் படங்களின் இயக்குநர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷ் பாத்திரத்தின் காட்சிகள் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், இத்தாலி, மொரோகோ மற்றும் ப்ரான்ஸ் நாடுகளில் இப்படம் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க…

தனுஷ், குஷ்பு வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் திரையுலகம்.!!

7:11 PM |
Dhanush, Khushboo Income Tax Raid on the house

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ்.

இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மேலும், வருமான வரித்துறை ஆனையர்கள் சில ஆவனங்களை கைப்பற்றியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

தனுஷ், குஷ்பு வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

6:34 AM |
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், வருமான வரித்துறை ஆனையர்கள் சில ஆவனங்களை கைப்பற்றியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

கொடி படத்தில் வில்லியாக த்ரிஷா..!!

10:39 PM |
துறை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கொடி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது .கடந்த சில படங்களில் அனிருத்தை  மட்டும் இசை அமைக்க பயன்படுத்தி  வந்தார் தனுஷ். ஆனால் பீப் சர்ச்சையால் அனிருத்  நிம்மதியாக  இசை அமைக்க முடியாது என நினைத்து இந்த படத்தில்  சந்தோஷ் நாராயணனை  புக் செய்துள்ளனர் .

இசை மற்றும் கதாநாயகியும் இந்த படத்தில் புதிய கூட்டணி  தான். 13 வருடங்களாக த்ரிஷா நடித்து வருகிறார் ஆனால் இப்போது தான் கொடி படத்தின் முுலமாக த்ரிஷா முதல் முதலாக தனுஷ் உடன் இணைகிறார். இந்த படம் ஒரு அரசியல் சம்பந்த பட்ட படம். இந்த படத்தில் த்ரிஷா நெகடிவ் கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளார்.
மேலும் வாசிக்க…

பொங்கல் தினத்தில் மோதிக்கொள்ளும் சிம்பு தனுஷ்..!!

8:46 PM |
பொங்கலுக்கு தனது அச்சம் என்பது மடமையடா படத்தின் சிங்கிள் டிராக் பாடலை சிம்பு வெளியிட, பதிலுக்கு தனது படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் இரண்டையும் வெளியிடுகிறார் தனுஷ்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் கடந்த புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்றை பொங்கல் தினத்தில் வெளியிட சிம்பு முடிவு செய்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் தாமரை, ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் வெளியாகும் பாடல் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் படத்தின் டைட்டில்  பர்ஸ்ட் லுக் இரண்டையும் பொங்கலன்று வெளியிட தனுஷ் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இதனால் சிம்பு, தனுஷ் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக செய்திகள் அடிபட்டு வருகின்றன. தனுஷ், சிம்புவின் சிங்கிள் டிராக் மற்றும் பர்ஸ்ட் லுக் ஒரே நாளில் வெளியாகும் போது சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களும் கண்டிப்பாக மோதிக் கொள்வார்கள்.

ஆனால் இது எல்லாம் தெரிந்தும் கூட இருவரும் இப்படி செய்கிறார்களே என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
மேலும் வாசிக்க…

ரயில் பயங்கரவாதிகளுடன் மோதிய தனுஷ்..!!

11:29 PM |
தனுஷ் நடிப்பில் மாரி, தங்கமகன் படங்களின் படப்பிடிப்பு முடிந்தபோதே அந்த படங்களைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துள்ள ரயில் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அதோடு எடிட்டிங் பணிகள் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடக்கும் நிலையில், வருகிற 12-ந்தேதி பேட்ஜ் ஒர்க் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

மேலும், இந்த படத்தின் டைட்டில் ரயில் என்பது யூனிட் நபர்கள் வாயிலாக வெளியான போதும், இன்னமும் அதை பிரபுசாலமன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதோடு அப்படம் குறித்த செய்திகளையும் வெளியிடவில்லை. ஆனபோதும், ரயில் படம் குறித்த சில தகவல்கள் கசியத் தொடங்கி விட்டன. முக்கியமாக,

அப்படத்தில் ரயிலை பயங்கரவாதிகள் கடத்தி விடும் ஒரு அதிரடியான காட்சி இடம்பெற்றிருப்பது இப்போது நமக்கு கிடைத்துள்ளது.அதாவது, நடுகாட்டிற்குள் ரயில் சென்று கொண்டிருக்கும்போது ரயிலை வழிமறிக்கும் பயங்கரவாதிகள் ரயிலை வேறு ட்ராக்கில் கடத்துவார்களாம். இதனால் பயணிகள் அனைவரும் அழுது கூச்சலிடுவார்களாம்.

இந்த சூழ்நிலையில், கேன்டீன் பையனாக நடித்துள்ள தனுஷ், புகுந்து அந்த பயங்கரவாதிகளை விரட்டியடித்து ரயிலையும், பயணிகளையும் காப்பாற்றுவதுதான் அந்த காட்சியாம். படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சி என்பதால் அந்த ஒரு காட்சியை மட்டுமே 2 வாரத்திற்கு மேலாக படமாக்கினாராம் பிரபுசாலமன்.

மேலும் வாசிக்க…

தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரயில் படத்தின் கதை இது தான்..!!

6:09 AM |
மைனா  படத்தில் மலையையும்இ கும்கி படத்தில் யானையைும்இ கயல் படத்தில் கடலையும் பின்னணியாக வைத்து படம் இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரபு சாலமன். தற்போது அவர் ரயிலை  பின்னணியாக வைத்து ஒரு காதல் படத்தை இயக்கி உள்ளார். அதில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முழு கதையும் ரயிலில்  தான் நடக்கிறது . மேலும் ஒரே நாளில் நடக்கும் கதை. டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயிலில்   கேண்டின் பாயாக வேலை  பார்க்கிறார் தனுஷ். இவர் பெயர் பூச்சியப்பன் இ அதே ரயிலில் மலையாள பெண்ணாக பயணிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் ஒரு நடிகையின் டச் அப் கேர்ள்.  டெல்லியில் படப்பிடிப்பு முடித்து விட்டு கிளம்பும் பட குழுவுடன் வருகிறார்.

பயணத்தின் போது இருவரும் சந்திக்கின்றனர். பேசிக்கொள்கின்றனர்இ இருவரின் வாழ்க்கை கதையையும் பரிமாறி கொள்கின்றனர். ரயிலில்  இருவருக்கும் காதல் மலர்கிறது. காதல் அதிகமாகும் போது அங்கு ஒரு பெரிய பிரச்னை பூகம்பம் போல வெடிக்கிறது. அது என்ன ? அதில் இருந்து மீண்டு இருவரும் காதலில் ஜெயித்தார்களா என்பது தான் கதை . ரயில் டெல்லியில் இருந்து  சென்னை வருவதற்குள் கதை முடிந்து விடும்.
மேலும் வாசிக்க…

மீண்டும் தனுஷ் அமலாபால் இணையும் ‘அம்மா கணக்கு’..!!

11:18 PM |
ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற நில் பட்டே சன்னாட்டா படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார்.

இதில் அமலா பால், ரேவதி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

Thanga Magan Official Trailer

8:14 AM |
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com