புத்தாண்டு தினத்தில் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தியும், ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டாடினர்.
மேலும் சிலர் வழியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் வழி மறித்து தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தனர். அப்போது தனுஷ் தனது ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் முலம் அந்த வழியாக வந்தார். அது தனுஷ் தான் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரை காரில் இருந்து வெளிவந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்குமாறு காரை சுற்றி தட்டினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது, சிறிது நேரத்தல் அங்கு வந்த காவல் துறையினர் அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
சமிபத்தில் வெளிவந்த தங்கமகன் படத்தின் வெளியீட்டை கூட பெரிதாக எடுத்துகொள்ளாமல் சென்னையின் வெள்ளநிவாரண பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொண்டவர் தனுஷ் என்பது குறுப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
தனுஷ்
,
மாட்டிய தனுஷ் காப்பாற்றிய காவல்