ஒரு படத்தை இயக்கி முடித்ததும் சில மாத இடைவெளிக்குப் பிறகு அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிடுவது சுந்தர்.சி. ஸ்டைல். தற்போது அரண்மனை - 2 படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் சுந்தர்.சி. அரண்மனை - 2 படம் இம்மாதம் 29 அன்று வெளியாக உள்ளது.
கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டிய அரண்மனை - 2 படம் கிராபிக்ஸ் பணிகள் முடியாமல் இழுத்துக் கொண்டேபோனதால் இம்மாதம் வெளியாகிறது. அரண்மனை -2 வெளியான சில மாதங்களில் தன் அடுத்தப் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தொடர்ந்து இரண்டு படங்களில் ஹன்சிகாவை கதாநாயகியாக்கிய சுந்தர்.சி,
தன்னுடைய அடுத்தப்படத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார்.நயன்தாராவிடம் கதை சொன்ன சுந்தர்.சியிடம் கதை தனக்குப் பிடித்திருப்பதாக சொல்லி இருக்கிறார் அவர். அவர் சொன்னதை வைத்து தன் படத்தில் நயன்தாரா நிச்சயம் நடிப்பார் என்று நம்பினாராம் சுந்தர்.சி.
நயன்தாராவோ மூன்று கோடி சம்பளம் கேட்டு தகவல் அனுப்பியுள்ளார்.
அதனால் நயன்தாராவை கமிட் பண்ணுவது பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம் சுந்தர்.சி.
Tags:
Cinema
,
அரண்மனை - 2
,
சினிமா
,
சுந்தர்.சி
,
நயன்தாரா