தீபாவளியன்று வெளியான வேதாளம் திரைப்படம் அஜித்தின் கேரியரில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
50 நாட்களை கடந்தும் இப்படம் தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் இப்படம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேதாளம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தொடர்ந்து படங்கள் வெளியானாலும் பொங்கல் வரை வேதாளம் சில திரையரங்குகளில் ஓடும் என சொல்லப்படுகிறது. வீரம் சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Tags:
Cinema
,
Vedhalam Box Office Collections
,
அஜித்
,
சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்
,
சினிமா