இப்போதைய தமிழ் சினிமாவில், அதிகமான சம்பளம் வாங்கும் அழகான நடிகை நம்ம நயன்தாரா தான்!
அதிகரித்த சம்பளம் வாங்கினாலும், நல்ல நடிப்பை உணர்ந்து வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகையாக உயர்ந்திருப்பவர் நயன் அம்மணி.
இவருக்குப் போட்டி என்கிற ரீதியில் இப்பொழுது யாருமில்லை. அந்தளவுக்கு ஹீரோக்களுக்கு நிகராக உயர்ந்து விட்டார். இவரை நம்பியே தயாரிப்பாளர்கள் முதல் போடும் சாதனை எல்லாம் இப்பொழுது நிகழ்கிறது எனலாம்.
இந்நிலையில், அண்மையில் நடைபெறவுள்ள 13ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், நயனின் நடிப்பில் கடந்த வருடம் வந்த 2 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
தனிஒருவன் மற்றும் மாயா ஆகிய படங்கள் பெற்ற வெற்றியை விட, நயனுக்கு இன்னொரு அடையாளமாய் இந்த விழாவில் நயனின் படங்கள் கலந்துகொள்வதும் சிறப்பானது.
Tags:
Cinema
,
Nayanthara
,
Trisha Illana Nayanthara
,
சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா
,
சினிமா