பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும். இன்னும் பெயர் இடாத படத்தில் இதில் தனுஷுடன் கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதில் ரயில்வேயில் கேன்டீன் நடத்தும் ஓனராக தம்பி ராமைய்யாவும் அவரிடம் வேலை செய்யும் டீ மாஸ்டராக தனுஷும் நடித்துள்ளனர். பிரபல நடிகையின் டச்சப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் வருகிறாராம்.
இப்படத்தின் கதையானது சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு செல்லும் ஒரு ரயிலில் சம்பவங்களே. எனவே, இப்படத்திற்கு ‘சென்னை டூ புதுடெல்லி’ என்று தலைப்பிடப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது புதிதாக இரண்டு தலைப்புகள் ஆலோசனையில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது ‘ரயில்’ என்ற தலைப்பும் ‘தடக் தடக்’ என்ற தலைப்பும் பரிசீலனையில் உள்ளதாம். இதில் ஒரு தலைப்பை தேர்வு செய்து படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பொங்கல் அன்று வெளியிட இருக்கிறார்களாம். இத்துடன் படத்தின் டீசரையும் வெளியிடும் முயற்சியில் இருக்கிறது படக்குழு.
Tags:
Cinema
,
சினிமா
,
தனுஷ்
,
பிரபு சாலமன் இயக்கத்தில் டீ மாஸ்டராக நடிக்கும் தனுஷ்