வேதாளம் படத்தினைத் தொடர்ந்து ‘தல’ அஜித் தற்போது அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் ‘வீரம்’ சிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இவர் ஏப்ரல் மாதம் முதல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. வேதாளம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணியாற்றவுள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
மீண்டும் இணையும் அஜித் நயன்தாரா ஜோடி
,
வேதாளம்