நடிகர் ரஜினிகாந்த் “2.O” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் பொலீவியா நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதற்காக ரஜினிகாந்தின் உதவியாளர், வேப்பேரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஓரிரு நாள்களில் இந்த சான்றிதழ் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Tags:
2.O
,
Cinema
,
Rajini as Don in Kabali
,
சினிமா
,
ரஜினிகாந்த்
,
ஷங்கர்