வேதாளம் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்கெனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் சுமார் 6 மாதங்கள் ஒய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பதால், அஜித் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அஜித் அடுத்ததாக வீரம், வேதாளம் என்ற வெற்றி படங்களை இயக்கிய சிவா இயக்கத்திலும், ஆரம்பம் என்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
சிவா இயக்கும் படத்தின் கதை அனைத்தும் முடிவாகி, திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவ்விரு படங்களிலும் அஜித், மே மாதம் முதல் ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
சிவா படத்தை தீபாவளிக்கும், விஷ்ணுவர்தன் படத்தை பொங்கலுக்கும் வெளியாகும் வகையில் தனது பணிகளை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித்.
Tags:
Ajith
,
Cinema
,
Vedhalam
,
சினிமா
,
புதிய வருடத்தில் அஜித்தின் புதிய திட்டம்