பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பூலோகம், தங்கமகன் மற்றும் மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களை மிஞ்சி சாதனை படைத்து வருகிறது சூர்யாவின் பசங்க 2.
கடந்த வருடத்தின் கடைசிப் படமாக வெளியான பசங்க 2 முதல் வாரத்தில் வெறும் 60 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் 2வது வாரத்தில் 90 லட்சங்களை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
ஜெயம் ரவியின் பூலோகம் முதல் வாரத்தில் 1.50 லட்சங்களை வசூலித்து இருந்தது. ஆனால் 2வது வார முடிவில் வெறும் 50 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது. இதுவரை சென்னையில் மொத்தமாக 2.06 கோடிகளை பூலோகம் வசூலித்துள்ளது.
கீதாஞ்சலி செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் கடந்த வாரத்தில் 22 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. தனுஷ் பெரிதும் எதிர்பார்த்த தங்கமகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சற்றும் எடுபடவில்லை.
தற்போதைய நிலவரப்படி பொங்கலுக்கான படங்கள் வெளியாகும் வரை பசங்க 2, பூலோகம் இரண்டும் நல்ல வசூலை எட்டும் என்று விநியோகஸ்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
தங்கமகன்
,
பூலோகம்
,
பூலோகம் வசூலை முந்திய பசங்க 2